தென்கலை திருமண்
ஶ்ரீ:ஶ்ரீமதே ராமாநுஜாய நம:ஶ்ரீ ஶ்ரீநிவாஸ மஹாகுரவே நம:
ஶ்ரீ அம்ருதபலவல்லீ ஸமேத அக்காரக்கனி யோக நரசிம்ஹ ஸ்வாமி

ஶ்ரீ அம்ருதபலவல்லீ ஸமேத அக்காரக்கனி யோக நரசிம்ஹ ஸ்வாமி

ப்ரபன்னஜன கூடஸ்தர் ஸ்வாமி நம்மாழ்வார்

ப்ரபன்னஜன கூடஸ்தர் ஸ்வாமி நம்மாழ்வார்
பகவத் ராமாநுஜர்

பகவத் ராமாநுஜர்

ஶ்ரீ முதலியாண்டான்

ஶ்ரீ முதலியாண்டான்
ஶ்ரீ தொட்டையாசார் ஸ்வாமி

ஶ்ரீ தொட்டையாசார் ஸ்வாமி

ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் ஸ்வாமி

ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் ஸ்வாமி
ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் சிங்கராசார் ஸ்வாமி

ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் சிங்கராசார் ஸ்வாமி

ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் யோகந்ருசிம்மன் ஸ்வாமி

ஶ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் யோகந்ருசிம்மன் ஸ்வாமி

அறக்கட்டளை

ஶ்ரீ K.K.C. பெரியப்பங்கார் ஸ்வாமி அறக்கட்டளை என்பது 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்த அறக்காட்டளை சோளிங்கபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2010ஆம் ஆண்டின் புத்தகம் IVஇல் 36ஆவது எண்ணாக (Regd No. IV/36/2010) பதிவு செய்யப்பட்டது.

இந்த அறக்கட்டளை இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும் . அதன் படியே இந்திய சட்டப்படி Darpan எண் TN/2024/0471091 ஆக அரசு சாரா நிறுவனமாக (N.G.O) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு:

  1. பழம்‌ பெருமை வாய்ந்ததும்‌, வரலாறு முக்கியத்துவம்‌ உள்ளதும்‌ 700 ஆண்டுகளுக்கு முன்‌ அமைந்ததும்‌ ஆன கோயில்‌ கந்தாடை சண்டமாருதம்‌ ஸ்ரீ கோ.கம்‌.சம்‌ தொட்டையாசாரியர்‌ திருமாளிகையை புதுப்பித்தல்‌, பராமரித்தல்‌, திருமாளிகை திருவாராதனம்‌ மற்றும்‌ உத்ஸவங்கள்‌ செய்து வித்தல்‌.
  2. பூஜைகள்‌ இன்றி உள்ள ஆலயங்களை எடுத்துத்‌ திருப்பணி செய்து முறையான பூஜைகள்‌ செய்ய நிதி ஆதாரங்கள்‌ ஏற்படுத்துதல்‌,முறையான செயல்பாட்டைத்‌ தொடர்ந்து கண்காணித்துச்‌ செயல்படுத்துதல்‌, பூஜை மற்றும்‌ அபிஷேகப்‌ பொருட்களை அளித்தல்‌.
  3. திருக்கோயில்களில்‌ திருமதில்கள்‌ பழுது பார்த்தல்‌, புதிதாக எழுப்பித்தல்‌, தளம்‌ அமைத்தல்‌, ஆழ்குழாய்க்‌ கிணறுகள்‌ அமைத்தல்‌.
  4. திருக்கோயில்‌ பாதுகாப்பை ஏற்படுத்த கதவுகள்‌, இரும்பு கேட்டுகள்‌ ஏற்படுத்துதல்‌, மின்‌ விளக்குகள்‌ அமைத்துக்‌ கொடுத்தல்‌, மின்‌ பொருட்கள்‌ வழங்குதல்‌.
  5. திருக்கோயில்களில்‌ நின்று போன திருவிழாக்களை மீளவும்‌ ஏற்படுத்துதல்‌, நடத்துவித்தல்‌, இதர ஆலயங்களுக்கு நன்கொடை அளித்தல்‌, பொருட்கள்‌ வழங்குதல்‌, திருப்பணியில்‌ பங்கேற்றல்‌.
  6. திருக்கோயில்களில்‌ புல்‌, பூண்டு, செடி, கொடிகளை அகற்றி சுத்தம்‌ செய்து தூய்மைப்படுத்துதல்‌,திருக்குளங்களைச்‌ சீர்திருத்தி மேம்படுத்துதல்‌, சுத்தம்‌ செய்தல்‌.
  7. திருக்கோயில்களில்‌ உரிய நீர ஆதாரம்‌ ஏற்படுத்தி நந்தவனம்‌ அமைத்தல்‌, பூச்செடி, கொடிகள்‌ இதர தொடர்‌ வருவாய்‌ தரும்‌ மரங்கள்‌ வளர்த்தல்‌, மருத்துவ குணமுடைய செடி, கொடிகள்‌, மரங்கள்‌ வைத்தல்‌, ஸ்தல விருட்சங்களை வைத்துப்‌ பராமரித்தல்‌.
  8. வேத, உபநிடத ஆகமப்‌ போதனா பள்ளிகள்‌ அமைத்து வேத விற்பன்னர்களை உருவாக்கி முறையான வேத வேள்விகள்‌ மிக அதிக அளவில்‌ நடைபெற அடிப்படையை ஏற்படுத்துதல்‌.
  9. திவ்ய பிரபந்த ஆய்வு மையம்‌ அமைத்தல்‌, கருத்தரங்குகள்‌ நடத்துதல்‌, இறைவன்‌ பெருமையை எளிய மக்களிடையே பரப்பி, சமூகத்தில்‌ நல்லொழுக்கத்தை ஏற்படுத்துதல்‌.
  10. திவ்ய பிரபந்த பாசுரங்களை இசையோடு முறையாகப்‌ பாட பயிற்சி அளித்தல்‌, எளிய பிரிவினரும்‌ சிறிதளவு கல்வி அறிவுடையோரும்‌ புரிந்து கொள்ளத்‌ தக்கவாறு பொருளுடன்‌ கூடிய புத்தகங்களை வெளியிடல்‌.

Trustees

இந்த அறக்கட்டளையின் தற்போதைய Trusteeகளாக கீழ்கண்ட நபர்கள் உள்ளனர்.

  1. திரு எஸ். ஶ்ரீதரன் - Managing Trustee
  2. திரு டி. இராமாநுஜம் - Trustee
  3. திரு எஸ். பத்மநாபன் - Trustee